பிரிவு

நீ என்றால் அது நான்தானே
நான் என்றால் அது நீதானே
காதல் என்றால் அது நாம்தானே
உனக்குள் என்னை
எனக்குள் உன்னை
புதைத்துவிட்டோம்
இனி எங்ஙணம் பிரிவோம்
பிரிந்து பிறந்தோம்
பிறந்தபின் இணைந்தோம்
இனி ஒரு பிரிவு
நான் நானாக
நீ நீயாக
பிறந்தால்
பிரிவோம்
அதுவரை பிரியாதிருப்போம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Apr-15, 12:08 pm)
Tanglish : pirivu
பார்வை : 67

மேலே