வார்த்தை - சொல்
சொல், சொந்தம் நீ என
சொல், சோகம் நீங்கஓர் மொழி
சொல், காதுகள் இன்பம்பருக இனியவை
சொல், மலர்கள் தோற்க்கும் இதழ்களிடம்
சொல், தேன் வார்த்தைகளை உதிர்க்கச்
சொல், பனியினும் இளகிய மனதிடம்
சொல், மென்மை இலக்கணம் பேசச்
சொல், வெண்டை விரல்களை வீசீச்
சொல், வெற்றியின் ரகசியம் நீயென
சொல், வற்றாத புன்னகை பொழியச்
சொல், பொழிய பொழிய பூமுகமே
சொல், நடக்கும் பாதை நீஎன
சொல், தயக்கம் தடயங்களை கொள்ளுமென
சொல், தவறாமல் கண்களிடமென் பிரார்த்தனை
சொல், ஓரக்கண்ணால் எனை பார்க்கச்
சொல், இதயம்கணிய இனிய வார்த்தை
பேசிச் செல்.
இரா நவீன் குமார்