நினைவுச் சின்னம்

உன்னுள் கலந்துவிட்ட
உயிருக்கு
நினைவுச்சின்னம் என்ற
நகல் எதற்கு...?
நீயே அவளின்
நினைவுச்சின்னம் தான்!
உனக்குள் இருக்கும்
உதிரத்தில் அவள் நினைவுகள்
உயிர் பெற்றுள்ள போது
இறந்தவருக்கு எழுப்பும்
நினைவுச் சின்னம் எதற்கு...?
நீ இறந்தால் கூட
நினைவுகள் ஆத்மாவில் பதிந்திடுமெனில்
நினைவுச்சின்னம் எதற்கு...?
அன்பாக அக்கறையாக
பேடும் வாரத்தைகளை விட
எதுவும் நினைவாகப் பதிவாகாது அவளுக்கு!
அப்புறம் யாருக்காக நினைவுச்சின்னம்..?