பேச்சு

சிலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

சிலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்

மேடையில் பேசுவதையோ

கோபத்தில் பேசுவதையோ

கூறவில்லை நான்



நேருக்குநேராகப் பேசுவதை...



சுதிபிசகாத தாள கதியாய்

‘ஊம்’ கொட்டுகிறார்கள்

கேட்கிறார்களா ?

கேட்பது போல் முகத்தைப்

பார்த்துக் கொண்டிருக்கிறார்களா ?



கவிஞர் சித.சிதம்பரமும்

இப்படித்தான் ‘ஊம்’ கொட்டுவார்

அரைமணி , ஒருமணி நேரம்

யார் பேசினாலும்

கேட்டுக் கொண்டிருப்பார்

குப்பைக் கூடையில்

கொட்டுவதைப் போல

அவரிடம் கொட்டி விடலாம் .



அண்ணன் பழ.கருப்பையா

மேடையில் மட்டுமல்ல

நேரிலும் , அவர் தான் பேசுவார் .

கவிஞர் சித.சிதம்பரம்

மரணப்படுக்கையில் இருந்த போது

நான் , அண்ணன் பழ.கருப்பையா

‘காரைக்குடி’ நாராயணன்

சென்ற போதும் பேசவில்லை



அண்ணன் பழ.கரு பேசினார்

நாங்களும் பேசினோம்

ஆனால் கவிஞர் சித பேசவில்லை

அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தார்

ஏன் பேசவில்லை

என்ன பேசி என்ன என்றா ?

பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா ?

அவரை எப்படி

இனிமேல் கேட்பது ?

எழுதியவர் : (4-Apr-15, 1:44 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : pechu
பார்வை : 106

மேலே