கவிதா

கவலை கடலோரம் கண்ணீர் வடித்தேன்...
சிறகற்ற அன்னமாய் அருகிலே வந்தாள்...
தென்றலாய் சிரித்தாள்...
அக்கா என என் உயிர் புகுந்து...தம்பி என்றே என் கவலைகளை களவாடினாள்.
புவி உயிர் அனைத்திற்கும் கருவறை தாய் ஒருவள் உண்டு.....
இவளோ என்னை கருவறையில் சுமக்காத தாய்...
புதுமை அவள்,பெருமை அவள்,
புனிதம் அவள்,பண்பின் சிறப்பும் அவள்,
அன்பு பாசம் பந்தம் என்ற சொற்களின் அகராதி அர்த்தமும் அவள்.....
அவளே என் கவிதா அம்மா