தீர்மானம்

தீர்மானத்தை தீர்மானிப்பதில்
அரசும் மக்களும் ஒன்றே!

ஒன்றை தீர்மானித்து
பின் குழம்பி நிற்க வேண்டியது..

தீர்மானிக்க ஒன்றை நினைத்து
தேவை இல்லாததை தீர்மானிப்பது..

அது தோல்வியடைந்தால்
தன்னைத்தவிர எல்லோரையும் சாடுவது..

சில தீர்மானங்களை எடுக்காமல்
நேரம் கடத்துவது என...

எப்படி எப்படியோ
தீர்மானங்களின் வாழ்க்கை
விழிபிதுங்கி பரிதாபமாய்
நம்மால் தீர்மானிக்கப்படுகிறது..!

பாவம் தீர்மானம்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Apr-15, 11:45 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 410

மேலே