கருணை

காசு பண கர்வ குணம்
கர்மத்தின் வினை சேர்க்கும்!
ஆசை மன அந்தரங்கம்
அவலத்தின் நிலை சேர்க்கும்!
கருணை உள்ள கலிவிரக்கம்
கடவுளின் அருள் சேர்க்கும்!
உணவு உண்டு உறைவதற்கு
உண்மையில்லா வாழ்வெதற்க்கு!
பூக்காத மொட்டுக்கு மணமில்லை!
புலராத பொழுதுக்கு வெளிச்சமில்லை!
உதவாத மனிதனுக்கும் இல்லை உயர்வு நிலை!
அன்பின் ஆனந்தமாய்
அகம் மகிழ மனம் குளிர
ஆதரவாய்!
நிழல் இதமாய் நிஜ மனதாய்
நிம்மதியின் கருணை வாழ்வு
வாழ்ந்திடுவோம்! மகிந்திடுவோம்!