நம் சந்திப்பில்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீள முடியாமல் போய் விடுகிறேன்
நீ என்னிடம் மீண்டும் மீண்டும் பேசும் நிமிடங்களில்
தொலைத்தூர கலங்கரை வெளிச்சத்தின் மிச்சத்தில்
தொடரும் தோணியாய் நிகழ்யுகத்தில் தொடர்கிறேன்
நீ பேசி முடிக்கும் தருவாயில்...
ஒரு மெல்லிய புன்னகையோடு தொடர்கிறது
நம் சந்திப்பு...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@