பெண்ணிலவு

நிலவே... புதுக்கவிஞன் நான்
வேம்பினிலை யூடே கண்ணடிக்கும் நிலவே
புதுக்கவிஞன் நான்!


நாண முற்றாயோ? உள்ளம் கோண லுற்றாயோ?
இமைசிமிட்டா வென்விழிப் பார்வையினால் நாணமுற்றாயோ?
விழியால் விழுங்குமிவன் தீயோனென உள்ளம் கோணலுற்றாயோ?


தனித்து நின்றாயோ? துணையை அழைத்தாயோ?
காடும் மலையும் கண்ணுறங்கும் நேரத்தில் தனித்து நின்றாயோ?
மேக வரையனுன் அரணென துணைக்கு அழைத்தாயோ?

அஞ்சினாயோ? என்னிடம் கெஞ்சினாயோ?
மேகவரையன் என்ஆணைக்கிணங்கி நடுவானிலுனைவிட, அஞ்சினாயோ?
கற்புகளவானியிடம் சிக்குண்ட பெண்மணிபோல் என்னிடம் கெஞ்சினாயோ?

மகிழ்ந்தாயோ? உள்ளம் நெகிழ்ந்தாயோ?
என்னவள் வரவுகண்டு என்விழி உனைநீங்க மகிழ்ந்தாயோ?
எங்களது மாசிலா காதற்கண்டு உள்ளம் நெகிழ்ந்தாயோ?

நிலவே.. கவிஞனின் காதலி நான்.
கண்ட இடமெங்கும் காதலி முகங்காணும் உத்தமன் என்னவர்!
அவர்கண்டது உனையன்று, உன்னில் என் முகம்!!!

எழுதியவர் : கிருஷ்ணா (6-Apr-15, 12:52 am)
பார்வை : 882

மேலே