நீலக்குயில் தேசம்32---ப்ரியா

கோவிலுக்கு போய் அர்ச்சனை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சமயம் சாமியாரை பார்த்த தாத்தாவிற்கு சாமியார் மூலம் நல்ல தகவல் கிடைத்தது அதாவது கயலுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை அவள் நினைத்த வாழ்க்கை கைக்கூடும் எந்த தீங்கும் அண்டாது என்று நல்ல வார்த்தை கூறி அனுப்பி வைத்தார்.....தாத்தாவும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தார்.....

ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது சாமியாரின் வாக்கே பொன் வாக்கே இருக்கட்டும்னு மனமுளுவதும் மகிழ்ச்சியாய் இருக்க அந்த திடீர் செய்தி அவரை உருக்குலைக்கவைத்தது...அதுதான் சுற்றுலாவிற்கு சென்றவர்களிடமிருந்து ஒரு அழைப்பு கயலுக்கு விபத்து நடந்துள்ளது என்று நொந்தே போனார் தாத்தா.........அதைகேட்டதும் அப்படியே சுருண்டு விழுந்தார்.

எப்படியோ ஆசுவாசப்படுத்திக்கொண்டு எழும்பினார்.....கயலின் அம்மாவுக்கும் விஷயம் தெரிய அழைப்பு வந்த எண்ணைத்தொடர்பு கொண்டார்கள் ஆனால் லைன் கிடைக்கவில்லை.....சிறிது நேரத்திற்கு பின்பு கயலே அம்மாவிடமும் தாத்தாவிடமு பேசி தனக்கு ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகுதான் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார் கயலின் தாத்தா.........

_______________________________________________________________________________________________________________________________

கயல்விழிக்கு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நல்ல படியாக சிகிச்சை முடித்தார் அந்த மருத்துவர்.......அவர் மிகவும் நல்லவராக இருந்தார் ஏனோ கயல்விழி மேல் அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது எனவே தந்தைப்போல் உடன் இருந்து உதவிகள் செய்து அனுப்பி வைத்தார்.........!

சரி சார் ரொம்ப நன்றி....என்று அந்த மருத்துவருக்கு நன்றி சொல்லி விடைபெற்று கிளம்பி வண்டியில் ஏறும் சமயம்.......ஹலோ ஒரு நிமிடம் என்று உள்ளிருந்து ஓடி வந்தார் அந்த மருத்துவர்?????

பதற்றமாய் ஓடிவந்த அவரை ஒருநிமிடம் ஆச்சர்யமாய் பார்த்தவர்கள் என்ன டாக்டர்?சொல்லுங்க?என்று கேட்டனர்?
எல்லாம் ஓகே.....ஆனால் எப்படி இந்த பொண்ணு வண்டியில இருந்து கீழே விழுந்தாள் என்று தான் எனக்கு தெரியவில்லை?இப்போதுதான் அவள் சுயநினைவுக்கு வந்துவிட்டாள் இல்ல... அதான் கேட்க வந்தேன் என்று வாஞ்சையோடு கேட்டார் மருத்துவர்.......

சொல்லுமா...எப்படி இப்டி நடந்திச்சி கொஞ்சம் தவறி இருந்தால் உன் உயிருக்கே ஆபத்தாயிருக்கும் ஏதோ வண்டி கொஞ்சம் மெதுவாக வந்ததால தப்பிச்சிட்டா.....சொல்லு கண்ணு என்று பாசமாக கேட்டார் மருத்துவர்....அப்பா இல்லாத அவளால் அவரது பாசமான வார்த்தைகள் மனதை தொட்டு விட (கீழே குத்தித்த விஷயம்)உண்மைய சொல்ல நினைத்தாள்.......ஆனால் இருக்கிற சூழல் சரி இல்லை என நினைத்தவள் யோசித்தாள்??

அது வந்து சார் நானு நானு..........என்று இழுத்தாள்.........?சொல்லுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார் அவர் அவரோடு அவளுடன் இருந்த மற்றவர்களும் உன்னிப்பாக அவள் பதிலையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்......(ஆனால் ஷீபா மட்டும் கோவமாய் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்......!)

அது வந்து சார்........எனக்கு ரொம்ப தலைவலியா இருந்திச்சி வாந்தி வர மாதிரி இருந்ததால எழும்பி வாசல் பக்கம் வந்தேனா அப்படியே தலை சுத்திடிச்சி எனக்கே தெரியாம கை ஸ்லிப் ஆகி வெளில விழுந்துட்டேன் என்று அவரது முகத்தை பார்க்காமல் மனதில் பட்ட பொய்யை சொன்னாள் கயல்......

நம்பலாமா?நம்பாம இருக்கமுடியுமா?என யோசித்த டாக்டர் சரிமா......இனி பார்த்து கவனமா இருந்துக்கோ மருந்துகள் எல்லாம் கொடுத்திருக்கேன் ஒழுங்கா சாப்பிடு வீட்டுக்குபோறதுக்க முன்னால சரி ஆயிடும் என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார் அவர்.

மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் இருக்கும் இடத்திற்கு போய் சேர்ந்தனர்.......இவர்களையே எதிர் பார்த்திருந்த மற்றவர்களுக்கு இப்பொழுது தான் உண்மை தெரிந்தது விபத்து நடந்திருப்பது கயல்விழிக்குதான் என்று..கோவத்தோடு இருந்த மூத்த ஆசிரியர்களும் சம்பவம் நடந்தது கயல்விளிக்குதான் என்றதும் திட்டுவதற்கு மனமின்றி நலம் விசாரித்து ரெஸ்ட் எடு என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

ஆனால் ராகேஷ் தான் அவள் மேல் பெரும் கோபத்தில் இருந்தான்.....அவளுக்கு விபத்து நடந்தது பற்றி அவன் முகத்தில் சிறிதும் கவலையின்றி இருந்தான்......அவனது எண்ணம் வேறு விதமாய் இருப்பது கயல்விழிக்கு நன்றாய் புரிந்தது.

கண்களால் அவனிடம் பேசியவள் தங்கும் அறைக்கு சென்றாள்.உடன் இரு தோழிகளும் சென்றனர்.

ஏதோ குற்ற உணர்ச்சியில் பார்ப்பது போல் தன் இரு தோழிகளையும் பார்க்க மனமின்றி பார்த்தாள் கயல் அப்பொழுது அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் தான் வந்தது......பதிலுக்கு ஷீபாவும் அவளை கண்ணீருடன் கட்டிக்கொண்டாள்.

ஏன்டி இப்டி பண்ணினா லூசு என்று அவளை செல்லமாய் அடித்தாள் ஷீபா......என்ன பண்ணினேன் என்று புரியாதவள் போல் கேட்டாள் கயல்?
பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னன்னா கேக்குறா என்று மறுபடியும் அடித்தாள்.....நீ வண்டியில் இருந்து குதித்தத நான் பார்த்தேன் தெரியாம கையோ காலோ தவறி நீ விளலன்னு எனக்கு நல்ல தெரியும்டி........வண்டிய நிறுத்துங்கன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போய் குதிக்குறா என்ன கராத்தை மாஸ்டர்னு மனசுல நினைப்போ?வண்டி மெதுவா வந்ததால தப்பிச்சா இல்லன்னா என்ன ஆயிருக்கும் என்று அக்கறையோடு பேசினாள் அதில் ஷீபாவின் உண்மையான அன்பு இருப்பதும் உரிமை இருப்பதையும் புரிந்துகொண்டாள் கயல்......!

உயிர்த்தோழிகள் கிட்ட மறைக்குற அளவுக்கு அப்படி என்ன விஷயம்டி உன் மனசுல இருக்குது ஒழுங்கா சொல்லு என்று கயலை பிடித்துக்கொண்டாள் ஷீபா...கூடவே அஜியும் என்ன விஷயம்டி சொன்னாதானே தெரியும் சொல்லு சொல்லு என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள்......

ம்ம்...சொல்றேன்டி.......

எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும் சொல்லிருக்கேன் இல்ல.....அந்த கனவுல வரக்கூடியவனோட முகத்த ஒழுங்கா நான் பார்த்ததே இல்லடி ஆனால் ராகேஷ என்மனசுக்கு புடிச்சி அவன காதலிக்குறேன்னு சொல்றதுக்க முந்தின நாள் என் கனவுல அந்த உருவம் தெரிஞ்சிது முகம் ராகேஷோட முகம் உடனே சந்தோஷத்துல குதிச்சேன் என் கனவுக்காதலன் ராகேஷ் தான்னு நினச்சிட்டிருந்தேன்.........அந்த நம்பிக்கையில தான் அவனக்காதலிச்சேன்.......இன்னிக்கு கூட நீலமலையில வச்சி அவன்கிட்ட காதல சொல்லணும்னு நினச்சி சந்தோஷமா இருந்தேன் ஆனால் அந்த சமயம்..........அந்த சமயம் என்று அழ ஆரம்பித்தாள் கயல்........

ஏய்! கயல் ஏன்? இப்படி அழறா? விஷயத்த சொல்லு என்று தோள் பிடித்து உலுக்கினாள் ஷீபா!!

நான் வண்டியில இருந்து குதிச்சதுக்கு காரணமே என்னோட அந்த கனவுக்காதலன்தான்டி என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள் கயல்.
என்னடி சொல்றா?என்று ஆச்சர்யமாய் கேட்டாள் அஜிதா.....?

ஆமாடி...இங்கு இந்த நீலமலையில் வைத்து ராகேஷிடம் காதலை சொல்லும் ஆசையில் சந்தோஷமாய் கடிதம் மற்றும் அந்த காதல் பரிசு பொருளுடன் கனவுகளோடு அமர்ந்திருந்தேன்.அச்சமயம் என் கனவில் வந்த அதே சூழலுடன் இந்த நீலமலையில் ஒரு பகுதியை பார்த்தேன் அதே பறவைகள் மரம் பூ செடி கொடிகள் அருவி என எல்லாம் கனவில் வந்த தேசமாகவே இருந்தது......ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் சமயம் தூரத்தில் அவன் நின்று கொண்டிருந்தான்.......அவனை பார்க்க மனது துடித்தது அதனால்தான் இருக்கையிலிருந்து எழும்பி நிறுத்துங்க வண்டிய நிறுத்துங்கன்னு கத்தினேன் ஆனால் நிறுத்தவில்லை....

அந்த அவசரத்தில் என்ன பண்றதென்று தெரியவில்லை ஒரு ஆவேசத்தில் சிறிது தூரத்தில் இருக்கும் அவனை பிடித்துவிடலாம் என்ற ஆசையில் குதித்துவிட்டேன் ஆனால் அவனை பார்த்து என்னால் பேசமுடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே விம்மி விம்மி அழுதாள் கயல்.......!

ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.......அப்போ ராகேஷ்????என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் அவர்கள் வகுப்பு மாணவி......மூன்றுபேரும் சொல்வதறியாமல் சிலையாய் நின்றனர்??????





தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (6-Apr-15, 4:26 pm)
பார்வை : 304

மேலே