திவசம்

என்ன விருந்து பலமா இருக்கு
ஆமா
செத்த நேற்றுக்கும்
சாவப் போற நாளைக்கும் சேத்து இன்று
சாப்டற திவசச் சாப்பாடு என்றேன்

தினமும் இப்படித்தானா
செத்த இப்பொழுதுக்கும்
சாவப் போற இப்பொழுதுக்கும் சேத்து இப்பொழுது
சாப்டற திவசச் சாப்பாடு என்றேன்

என்னல சொல்லுத
செத்த எனக்கும்
சாவப் போற எனக்கும் சேத்து நான்
சாப்டற திவசச் சாப்பாடு என்றேன்

நண்பன்... ங்ஞே என்று உதடு பிதுக்கிச் சென்றான்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Apr-15, 5:59 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 198

மேலே