கொசு புராணம்


கைதட்டி
பாராட்டித்தான்
உங்களின்
மரணம்கூட
கெளரவிக்கப்படுகிறது...

தேசத்தில்
தேசியகீதம்
தெரியாதவர்கள்கூட
உண்டு..
உங்களின்
இரகசியராகத்தை
அறியாதவர்கள்
உண்டா.....?

ஏழை
பணக்காரன்
சாதி
மதம்......
பிரிவினைகள்
ஏதுமறியாத
சமதர்மவாதிகள்
நீங்கள்...



”கொசுவைப்போல
ஊதித்தள்ளிவிடுவேன்”
என்கிற
தைரியசாலிகளைப்பற்றி
உங்களுக்கு
தெரியும்...
ஆறுமணிக்குமேல்
அவர்களின்
வீட்டுக் கதவுகள்
திறந்திருப்பதில்லை...

மனிதர்களைப்போல
பெண்ணினம்
அடங்கிக்கிடப்பதில்லை
உங்களிடையே..
ஆண்கள்
அஹிம்சாவாதிகளாய்
இருக்க..
பெண்கள்தான்
வன்முறையில்
இறங்குகிறீர்கள்....

ஆறடி மனிதராய்
இருந்தாலும்
ஒரு கடியில்
உயிர்துடிப்பது
விந்தை...

நிலம், நீர்
நெருப்பு , காற்றென்று
இயற்கைக்குமாறாய்...
எல்லாவற்றையும்
மாசுபடுத்திவிட்டு..
”கொசுக்களை ஒழிப்போம்”
என்று
மனிதன்
கூச்சலிடுவதோ......
விந்தையிலும் விந்தை.....!!

எழுதியவர் : muruganandan (2-May-11, 11:00 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 284

மேலே