அப்பா
நான் படித்த புத்தகம் நீங்கள்...!
எனக்குப் பிடித்த ஒரேயொரு
தன்னலம் கருதாத பிறவி நீங்கள்..!
பாலப் பருவத்தில்
என்னை பக்குவப் படுத்தி
வழிகாட்டியாய் இருந்தீர்கள்..!
இளம்பருவத்தில் எனக்கு
நண்பனாக இருந்தீர்கள்..!
நாமிருவரும் தோள்மீது
தோள் கைபோட்டு
தெருக்களில் நடந்து போனது
கண்டு பொறாமைப்பட்டது
நமது கிராமம்...!
எப்போதும் எனக்கு
இன்பத்தை மட்டுமே
கொடுத்த நீங்கள்
உங்கள் மரணத்தின்
வாயிலாக மட்டும் என்
இதயத்தை வெடிக்க
வைத்தது ஏனோ...?
எல்லாவற்றுக்கும் மாற்று வழி
வைத்த இறைவன்
உங்களுடன் இருக்க மட்டும்
மாற்று வழி வைக்காதது ஏனோ..?