மந்திரப் புன்னகை
கோழி கூவிய
ஒலியில் விழித்த ஆதவனோடு
கண் விழித்த எனது காலையில்
அருகாமையில் கிடந்த
என் தலை யணை
பக்கத் துணையாக இருந்தது.
எனது முகநீர் திவலைகள்
மெளனக் காமத்தை
வரைபடமாகவும் பதியமாகவும்
தலைத்துணையின் பஞ்சில் நனைந்திருந்தது.
நானாகவே பார்த்து
சிறு புன்னகை இரைத்தேன்.
அது மந்திரப் புன்னகை.
நேற்று அந்தி சாயுங்காலம்
கோலக்கிளியின் கையைப்பிடித்த பலனால்
மனதுக்குள் மந்தி செய்த லீலை.