உனக்காக

மறுபடியும் பூக்கட்டுமா
என்று பூக்களெல்லாம்
என்னை கேட்கின்றன
நீ தலையில் சூடுவாயென்று.......

=====================================================

நான் உன்னை பற்றி
கவிதையாக எழுதுவது போல
நீ தினமும்
என்னை திட்டி செல்வதும்
கவிதைகளுக்குள் அடங்கிவிட்டது....
நீ திட்டியதால்.......

=====================================================

உன் இதயம் எனதல்லவா....
உன் ஒவ்வொரு
இதயத்துடிப்பிற்கும் நீ என்னை
நினைப்பதாக எடுத்துக்கொள்ளட்டுமா....
அப்படியானால் நீ என்னை
ஒரு நிமிடத்திற்கு 80 தடவையும்,
ஒரு மணி நேரத்திற்கு 4,800 தடவையும்,
ஒரு நாளைக்கு 115,200 தடவையும்,
நினைக்கிறாய்....
ஆனால்,
இல்லவே இல்லை என
என்னிடம் சாதிக்கிறாய்.....

====================================================

என் இரு கண்களுக்கும்
சண்டை உன்னை யார்
முதலில் பார்த்தது என்று...........?

====================================================

உன் கன்னக்குழியில்
விழுந்த நான்
வெளிவராமல் சிக்கிக்கொண்டேன்.....
உன் சிரிப்பு என்மீது சரிந்ததால்......

====================================================

முற்றும் துறந்த
முனிவராக வாழ ஆசை தான்...
ஆனால்,
உன்னை பார்த்தால்
முற்றும் துறந்த
முனிவரும் முதுமை
நீங்கி காதல் வயப்படுவான்...........

====================================================

பூஞ்சோலையை விட
புனிதமாக மாறியது
என் மனம்.......
நீ குடியேறியதால்..........

====================================================

வேற்றுகிரக வாசியாகிவிட்டேன்
உன் மனதில் வசிப்பதால்.........

எழுதியவர் : நவீன்குமார் கு (6-Apr-15, 9:26 pm)
Tanglish : unakaaga
பார்வை : 81

மேலே