கனவு
பரலோகத்தில் நான்
நியாயத்தீர்ப்பு நாள்
கடவுள் ; இந்த நரன் செய்த குற்றம் என்ன
கடவுள் அடிவருடிகள் ; பூலோகத்தில் பரமாத்மா கிருஷ்ணனைப் பார்த்து ' உன் அறிக்கையை ஏற்கிறேன் . இன்று என்னுடையது, நாளை உன்னுடையது(வேறொருவருடையது) ஆகையால், இன்று போய் நாளை வா ' இப்படிக்கு ஜீவாத்மா கிருஷ்ணன் என்று இளக்காரமாய் பேசியவன்.
கடவுள் ; பேசியது உண்மையா
நான் ; ஆம்.பேசினேன்...மாண்புமிகு கடவுள் அவர்களே
கடவுள் ; என்ன தண்டனை தெரியுமா
நான் ; எதுவானாலும் ஏற்கிறேன்...மேதகு கடவுளே
கடவுள் ; இவனைக் கொண்டு போய்...
நான் ; இருங்கள் கடவுளே
கடவுள் ; என்ன
நான் ; எனக்கு ரெண்டுக்கு வருகிறது .இங்கு 'டாய்லெட்' இருக்கா
கடவுள் ; இங்கு யாருக்கும் 'டாய்லெட்' வராது.அதனால் இங்கு 'டாய்லெட்' கிடையாது
நான் ; அப்போ நான் என்ன பன்றது
கடவுள் ; பூலோகத்துக்குப் போயிட்டு வா
நான் ; சரி
கடவுள் ; இவன் அந்த அதே ஜீவாத்மா கிருஷ்ணன் தானே
கடவுள் அடிவருடிகள் ; ஆம் பிரபு
கடவுள் ; இவனைக் கொண்டு போய்...
நான் ; இருங்கள் கடவுளே .இங்கு வரும் வழியில் எனது இரு மொட்டை நண்பர்கள் தந்த பழனி பஞ்சாமிர்தமும் திருப்பதி லட்டுவும் சாபிட்டது செமித்ததால் மீண்டும் வருகிறது ரெண்டுக்கு
கடவுள் ; என்ன திரும்பவும் ரெண்டுக்கா
நான் ; சாப்பிட்டால் ரெண்டுக்கு வரத் தானே செய்யும்
கடவுள் ; அப்படி என்றால் சாப்பிடாதே
நான் ; சாப்பிடவில்லை என்றால் செத்து விடுவேன். எனது பிணத்தை பூலோகத்தில் எரித்தோ புதைத்தோ விடுவார்களே.நான் எப்படி இங்கு வருவது
கடவுள் : ங்ஞே...!!!
(கொசுறு : அதற்குள் கனவு கலைந்து விட்டது)