பின்நோக்கு பார்வையல்ல மனிதனின் தேடல்

வயல்வெளிகளுக்கு
மத்தியில்
மணல் பரப்பில்
மூங்கில்காட்டில்
காற்றின் வாசத்திலும்
குயில்களின் இசையிலும்
கண்ணாமூச்சி ஆட்டமும்
கதைகளும் பேசி
மகிழ்ந்து கொண்டிருக்கையில்
உலகத்தின் ஒட்டுமொத்த
பார்வையும் எங்கள் மீது
விழுந்து விடுமோ!
என்பது போல்
சத்தத்தை எழுப்பிக்
கொண்டிருந்தோம்...

அந்த இளமை கால
வாழ்க்கையை
மீண்டும் ஒரு முறை
வாழ்ந்து பார்க்க
ஆசை...

~ கவிதையை
எழுத நான்
நினைத்தவுடன்
ஆயத்தமானது
என் எழுதுகோல்.
நீண்ட இடைவேளைக்கு
பிறகு
வாழ்வின் வசந்தத்தை
வடிக்கிறேன் என்று...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Apr-15, 6:30 pm)
பார்வை : 148

மேலே