என்னோடு வா-வித்யா
என்னோடு வா-வித்யா
பூக்களின் காது திருகி
புதுவாசம் கேட்டுப் பருக
என்னோடு வா நீ....!!
அடர் பனித்தூவ
உறைபனியென இறுகி
உலர என்னோடு..........
காற்றைத் துளைத்து
மென் பூட்டைத்திறந்து
உயிர் தொலைக்க
செவ்விதழ் வருத்தி
மெல்லிசை அருந்தி
புது கீதம் இசைக்க
இமைகள் மூடி
இதயம் திறந்து
இனி ஓர் விதி செய்ய
காமம் சிதைத்து
காதல் புதைத்து
உணர்வுகளின் கல்லறை
எழுப்ப வா.......!!
நீ
என்னோடு வா.......!!
என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?
ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!
என் காதல்
கூட்டினை
உன் காமத்தீயினில்
கொளுத்த அனுமதியேன்
உன்உணர்வுத் தூண்டல்களின்
வினையூக்கி அவதராம் பூண்ட
ஆண்மைக்கு சவால் விடும்
பெண்ணிவள் தானடா......!!
முடிந்தால்
மெய் காதலால் எனை
ஆளடா..........!!
************************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
