கைப்பை பொருள் தானோ

கைப்பை பொருள் தானோ....?
அன்பே..! என் அணுத்திரளே..!
அயர்வு நீக்கும் அரு மருந்தே...!
உன் விழி பேசும் -
கதையாவும் விழாவாகும்...!
உன் முகம் தூவும் -
ஜாலங்கள் மழை மேகம்...!
உன் இதழ் சிந்தும்
மொழித் தாகம் இதராகம்...!
உன் அங்க அழகோடை
அமுதான இசை மேடை.....!
உன் பாதச் சுவடுகளோ
மகரந்த மென் சுகந்தம்....!
எனினும்.......
என் நெஞ்சோ இன்னுமுன்
கைப்பை பொருள் தானோ..?