யார இறைவன் எங்கே இறைவன் - இறைவனை தேடும் மை சூ பாண்டியன்
யார இறைவன் எங்கே இறைவன் -
இறைவனை தேடும் மை சூ பாண்டியன்
பாலுக்கு அழும் குழந்தைக்கு
பால் புகட்டும் மனிதனே பிள்ளைக்கு இறைவன்!
அவசரமாய் பரீட்சை எழுதும்போது
மையில்லாத பேனாவுக்கு மாற்று
பேனா தருபவரே மாணவனுக்கு இறைவன்!
சோற்றுக்கு வழியில்லாதவனுக்கு
கூலி வேலை தந்து சோற்றுக்கு வழி காட்டுபவனே வழியில்லாதவனுக்கு இறைவன்!
பிள்ளைகளுக்கு செய்ய என்று
பட்டியல் போட்டு வைத்திருக்கும்
தாய்க்கோ பணத்துடன் வரும் கணவனே
தாய்க்கு இறைவன்!
கேட்டதையெல்லாம் வாங்க
காசை கடுகு டப்பாவிலிருந்து
கொடுக்கும் தாயே மகனுக்கு இறைவன்!
தேவைகளுக்காக தன்னுடைய
ஏடிம் ஆகும் அண்ணனே தங்கைக்கு!இறைவன்
யார் யாருக்கும் எவ்வெப்போது எது தேவையோ அவ்வப்போது அதை தருபவரே
எவருக்கும் இறைவன்
உங்கள் துன்பத்திலும் எனக்கு உதவ நினைத்த நீங்களே எனக்கு இறைவன்
அனால் நீங்கள் சொன்னதை மறுக்கும் போது அந்த இறைவனை நான் தேடுகிறேன் lll
தயவு செய்து உங்கள் இறைமையை இழக்காதீர்கள்
இது வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் இந்த பக்தன் பாண்டியனின் வேண்டுகோள்
இறைவனுக்கும் லஞ்சம் தந்து காரியம் சாதிக்க காணிக்கை ,கைங்கரியம் என்றும் பலதை
கண்டுபிடித்தனரோ...?
உதவி செய்பவர் உருவில் இறைவனைக் காண்பது சிறப்பு ஆனால்
இறைவனை கூட்டாளியாக்கி இறைவனுக்கே லஞ்சம் தருவது நியாயமா ..?