நான் தமிழன் தனி தேசம் கொடு

இனி நான் இந்தியன் அல்ல
நான் தமிழன்
தனி தேசம் கொடு

கூலிக்கு மரம் அறுத்தோம்
தோட்டாக்கள் துளைத்தனவே
ஏழைக்கு மரணமய்யா
ஏன் இந்த அவலமய்யா

கோடிகளை சுருட்டியவன்
கோபுரமாய் நிமிருகிறான்
கோமணத்தை திருடியவன்
ஓ மரணத்தில் அமருகிறான்

கண்கட்டி இருந்தாலும்
பணவாசம் கண்டதுவோ
சமதர்மம் அற்ற கையில் தராசு
ஓர்பக்கம் இறங்கியதோ

குருதி சிந்தி இறந்திடதான்
என் தமிழன் பிறந்தானா.......?
இரக்கமற்ற நரிகளுக்கு
இரையாகி விட்டானா......?

சுடுகாடு சென்றவர்க்கு
பதில்தேடு பாரதமே நாங்கள்
சுயம்காட்ட எழுந்துவிட்டால்
மண்னோடு நீ இக்கணமே

எழுதியவர் : கவியரசன் (7-Apr-15, 11:31 pm)
பார்வை : 83

மேலே