சங்கீதம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

பனிமழை பொழிய
தென்றல் அசையும் சத்தம்!!
தொலைதூரத்தில்
கூவும் சோலைக்குயில் சத்தம்!!

நீர்விழ்ச்சியில் வழிந்தோடும்
நீரலலை சமுத்திரத்தில்
பாயும் சத்தம்!!
கன்னிப்பாவையின்
கால் கொலுசு அசையும் சத்தம்!!

மனம் பிடித்தவளின்
சிரிப்புச் சத்தம்!!
ஊர் தூங்கும் நேரம்
நாமம் தெரியாத பூச்சிகளின்
இரைச்சல் சத்தம்!!

தாய்பாடும் தாலாட்டுச்
சத்தம்!! இதயம் இயங்கும்
'லப் டப்' சத்தம்!! சங்கீதம்!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (8-Apr-15, 12:06 am)
Tanglish : sangeetham
பார்வை : 255

மேலே