விளங்குமா தெளிவுகள்
நாம் யார்
நான் யார்
விடை அறியோம்
வினாக்கள் பல
விளைவிக்கும் விபரீதங்கள்
விடைகளால் விளையும்
விநோதங்கள் பல
விடியுமென உணர்வோமோ?
விதைகளை மீறும்
விருட்சங்கள் வேர்களை
விழுங்கும் வேதனைகள்
விளங்குமா தெளிவுகள்
விட்டொழியுமோ விரோதங்கள்?