ஆட்டுக்குட்டி- சகி

என் வீட்டு ஆட்டுக்குட்டி

தந்தையின் ஆசைக்காக
அன்பாக வாங்கிய
கருவாச்சி காயத்ரி ....

அம்மா அன்பாக
வைத்து அழைக்கும்
செல்லப்பெயர் காயத்ரி ...

பிறந்த இரண்டு
வாரங்களில் தாயை
விட்டு பிரிந்துவிட்டது ...

காயுவின் கதறலில்
உணர்கிறேன் அன்னையை
பிரிந்த ஏக்கத்தின் வலிகளை...

தாய் தந்தையின் மடியில்
மழலையாகவே தவழ்கிறது ....

எழுதியவர் : சகி (8-Apr-15, 12:56 pm)
பார்வை : 311

மேலே