நீலக்குயில் தேசம்33---ப்ரியா

(முன் கதை சுருக்கம்:கயலுக்கு விபத்து நடந்ததை கேட்டதும் தாத்தா அதிர்ச்சியடைந்தார்....சிறிய காயம்தான் என்று அறிந்ததும் நிம்மதியடைந்தார்.....கயலின் கனவும் அந்த காதலன் விஷயமும் உடன் படிக்கும் இன்னொரு மாணவிக்கும் தெரிந்துவிட்டது.......கயலின் கடிதத்தை படித்தவானின் உடலில் ஒரு அடையாளம் இருந்தது அதாவது அந்த ஒரு கண்....)

இனி.....

சுற்றுலா போக வேணாம் போகவேணாம்னு ஆயிரம் தடவ சொன்னேன் கேட்டாதானே..இந்த காலத்து பொம்பள புள்ளைங்க எல்லாம் கம்பீரமா ஆண்கள மாதிரி வெளில சுதந்திரமா நடக்குறாங்க அதெல்லாம் தப்பில்ல ஆனால் பெரியவங்க பேச்சையும் கேட்கணும் இல்ல ஒன்னுகணக்கா ஒன்னு ஆகிடுச்சின்னா என்ன பண்றது......படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டாதானே என்று வசைபாடிக்கொண்டிருந்தார் கயலின் தாத்தா.....

கொஞ்ச நேரம் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள் சுசீலா....அதற்கு மேல் கேக்கமுடியாமல்....

என்ன மாமா இது சின்ன புள்ளையாட்டம்......எங்க இருந்தாலும் நடக்கவேண்டியது நடந்துதான் ஆகும்....விதின்னு ஒன்னு இருக்குது மாமா அத யாராலயும் மாத்தவே முடியாது.......நாம போற வழியில விதி வந்தாலும் விதியின் பாதையில் நாம சென்றாலும் எல்லாம் ஒண்ணுதான் நடக்க வேண்டியதெல்லாம் சரியான நேரத்துல நடந்துதானே ஆகணும்.......எனக்கு மட்டும் கவலை இல்லையா என்ன?இருந்தாலும் அவளுக்கு லேசான காயம் என்றதும் நிம்மதியாயிருக்குது.......கண்களை முந்திக்கொண்டு வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள் சுசீலா.....!

இப்பொழுது தாத்தாவிற்கு இவளது பேச்சின் மூலம் குபீரென ஒரு விஷயம் தோன்றியது.......ஒரு பெரிய உண்மை ஒன்று ஓங்கி அறைந்தது கன்னத்தில்........(அதுதான் தன மகள் ராஜெலெட்சுமி விஷயம்)???

ஏதோ அவள் அறியாமல் அன்று செய்த தவறுக்காய் இன்றுவரை..... இத்தனை வருடங்கள் அவளை ஒதுக்கி வைத்திருந்தது போதாதா? இன்னுமா தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள் பலமுறை கேள்வி கேள்வி கேட்டு மனதுக்குள்ளேயே அழுதும்விட்டார்......

தன் மகளை மன்னித்து மனதார ஏற்றுக்கொள்கிறேன் என தன் பிடிவாதங்களை முற்றிலும் விடுத்து இன்னிக்கே தன் மகள் மற்றும் மருமகனிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு சமாதானமாய் போகவேண்டும்.....இனிமேல் எந்த வீண் வறட்டு கௌரவமும் தேவையில்லை அன்புதான் எப்பொழுதும் முக்கியம் என்பதையும், ஒரு நல்ல மனிதன் மனதறிந்து எந்த தவறும் செய்வதில்லை சூழல் அவனை தவறு செய்ய வைத்துவிடுகிறது அதை நாம் தான் பெருந்தனமையோடு மன்னிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என இந்த சூழலில் உணர்ந்து கொண்டார்......!

எம்மா சுசீலா என் மகளுக்கு ஒரு அழைப்பைக்கொடு பேசணும் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்.....சுசீலாவுக்கும் மனம் நிம்மதியடைந்தது.....ஏதோ ஒரு விஷயம் பேசபோய் மாமா மனம் மாறிவிட்டார் என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்...!
_________________________________________________________________________________________________________________________________
தன் தோழிகளோடு கனவுக்காதலன் மற்றும் அவனைப்பார்ப்பதற்காகவே வெளியில் குதித்தேன் என்று கயல் அழுது அழுது சொல்லிக்கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் மறைந்து நின்று ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் அவர்கள் வகுப்பு மாணவி ஜெனி....???

அப்பாடா கதை முடிஞ்சிடிச்சா?என்னடி இது புதுக்கதையா?இல்ல பழையக்கதையா?சும்மா நச்சுன்னு இருக்குது எத்தனை படங்கள் பார்த்திருக்கேன் இந்த மாதிரி ஒரு கதையும் இல்லன்னு தான் சொல்லமுடியும் அவ்ளோ க்யூட் சும்மா சொல்லக்கூடாதுடி நல்ல திறமை உன்கிட்ட இருக்குது இத வச்சே நீ முன்னுக்கு வந்திருவா...... உனக்கு நல்லா கதை எழுதலாம் நல்ல பியூச்சர் உனக்கு என்று கிண்டலடித்தாள் அவள்.....

ஏய் லூசு சும்மா இருடி என்று அதட்டினாள் ஷீபா..

பின்ன என்னடி இது........ தினமும் கனவு வருதாம், அதுல ஒரு ஹீரோ வராராம், அவனையே நிஜத்துல பார்ப்போம்னு நம்பினாளாம், அவனுக்காக காத்துட்டிருந்தாளாம்........ அப்புறம் அவன் தான் ராகேஷ்ன்னு நினச்சாளாம், அவனையே காதலிச்சாளாம்........ இப்போ மறுபடியும் கனவுல வந்த ஹீரோவ நிஜத்துல பார்த்தாளாம் எதுவுமே புரியல....இவ பேசுறத எல்லாம் நம்ப சொல்றியா?இவளுக்கு ஏதோ ஆயிடிச்சிப்பா முத்துறதுக்குள்ளால ஒரு நல்ல மருத்துவரா பார்த்துக்க வேண்டியதுதான் என்று ஜெனி பேசிக்கொண்டே போனாள்........

ஆனால் கயல் எதுவும் பேசாமல் மௌனமாய் தலைகுனிந்து நின்றாள்.......

என்ன ஜெனி அவ இருக்கிற இந்த நிலைமையில நீ வேற இப்படி வெறுப்பேத்துறா.....முடிஞ்சா அவன் யாருன்னு தேடி கண்டுபுடிப்போம் அதுதான் நம் தோழிக்கு நாம் செய்யும் பேருதவி.......இந்த விஷயத்த வேற யார்க்கிட்டயும் சொல்லவேண்டாம் முக்கியமா ராகேஷ் என்று கண்டித்தாள் ஷீபா.....!

சரிமா நான் யார்க்கிட்டயும் சொல்லல ஒன்னு தெரியுமா?என்னோட அண்ணன் இங்க தான் தங்கி நின்னு வேலைப்பாக்குறான் அவன்கிட்ட சொல்லி ஏதாச்சும் பண்ணலாம் கவலை படாத என்று நம்பிக்கையளித்தாள் ஜெனி......

சரி என்ற கயல் அவள் கைகளைப்பிடித்து அழுதாள்......அவளது உண்மையான அந்த கண்ணீர்த்துளிகள் கயலின் ஆள் மனதை உணர்வுகளை தோழிகளுக்கு உணர்த்தின......ஜெனியும் அவளது கண்ணீரில் அப்படியே உருகிப்போனாள் மிக விரைவில் உனக்கு உதவி பண்ணுகிறேன் இன்னிக்கே அண்ணனுக்கு கால்பண்ணி நடந்ததை சொல்லி விசாரிக்கலாம் இங்கு எல்லாமே அவனுக்கு அத்துப்படி.........என்று வாக்கும் அளித்தாள் அவள்.

________________________________________________________________________________________________________________________________

அந்த கடிதத்தை முழுவதும் படித்தவனுக்கு அந்த பொண்ணை உடனே கண்டுபுடித்துவிடவேண்டும்..........நான் தான் நீ தேடும் கனவுக்காதலன் என்று சொல்லி அள்ளி அணைத்து அழணும் போல் இருந்தது. தன் உடம்பிலிருக்கும் அந்த அடையாளத்தையும் காட்டிநான்தான் உன் மன்னவன் என்று கத்தணும்..........நீ எங்கடி இருக்கா என் தேவதையே என்று கண்மூடி அமர்ந்தான் .......???

யாரிவள் இவ்வளவு நாள் எங்கிருந்தாள்?இப்போது எங்கிருக்கிறாள்? அவளுக்கு கனவில் வருவதெல்லாம் கடிதத்தில் எழுதியிருக்கிறாள் பிரமை என்றும் சொல்லமுடியாது.......இதுல ஏதோ ஒரு வித உண்மைகளும் அடங்கியிருக்கிறது இல்லையென்றால் அவளது இப்போதைய காதலன் தான் கனவுக்காதலன் என்று அவனுக்கு கொடுக்க எழுதிய கடிதம் சரியான நேரத்தில் என் கையில் கிடைத்திருக்குமா? இதுதான் விதியா? விதி இன்னும் எத்தனை காலங்கள் இப்படி விளையாடும் எப்படி கண்டுபுடிப்பது.......இது நிரந்தரமா?இல்லை பொய்த்து போகுமோ?இல்லை இல்லை எப்படியானாலும் அவளை கண்டுபுடித்தே ஆகணும் ஏன்னா?உண்மையிலேயே அவனது கனவுக்காதலன் நான் தான்.........அவள் அழகியோ? அழகில்லாதவளோ?இல்லை பேரழகியோ? எதுவாயினும் எனக்கு அவள் வேண்டும்... அவளே...... அவள் மட்டுமே இனி எனக்கு......என்று மனதில் அழுத்தமாய் அவளது கண்களை வைத்து......"நீதான் எனக்கு....உனக்குத்தான் நான்"என்று உறுதி எடுத்துக்கொண்டான்........!

இவன் அப்படியே கண்களை மூடி யோசனையில் இருந்த.......அச்சமயம் "ஹலோ மிஸ்டர் மதன் நீங்க இங்க புதுசா வந்திருக்கிற வனத்துறை அதிகாரிதானே? ஐ ஆம் கார்த்திகேயன் எஸ்.ஐ ப்ரம் இரணியல்" என்று மிரட்டும் குரலில் காவலர் உடையில் வந்து அவன் முன் நின்றார் அந்த சப் இன்ஸ் கார்த்திகேயன் ????????



தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (9-Apr-15, 12:54 pm)
பார்வை : 320

மேலே