இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று
மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.
கலையின் கிளையான கதையொன்று முறிந்தது,
தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,
ஆன்மாவின் மனதில் வேரூன்றிய
ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே!
உலகம் கண்டும் காணாத நிகழ்வை
கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே!
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.
பல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,
உன் குரல் கேளாத வானாலையில் உன் பாடல் ஒலித்தது.
ஊரெல்லாம் உன் பேச்சு,கலங்கியது கலைஞன் வரிகள்,
நினைத்தது போல் உன் சாதனை வந்த இதழில் உன் மரணம் தலைப்பானது.
ஒரு மனிதன் இங்கே மண்ணுக்கு பசளையாகிறான்.
ஒருத்தர் அக்கினிக்கு இறையாகின்றான்.
மரணம் என்பது நியதி, உனக்கும் எனக்கும்
நிரந்தரமானது என்பதை காட்டிவிட்டான் சதிகார எழுத்தாளன்.
கவிக்குறிப்பு:*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் முதலிரண்டு வரிகளும்,ஆறாவது கட்டமைப்பில் முதல் வரியும் மர்ஹீம் திரு.நாகூர் ஹனிபாஅவர்களின்மரணத்தின்வலியைதாங்குகிறது.
*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் ஏனையே இரு வரிகளும் ஆறாவது கட்டமைப்பில்இரண்டாவது வரியும் மறைந்த எம் இலக்கிய தந்தை திரு.ஜெயகாந்தன் அவர்களின் இரங்கலை குறிக்கும்.
*இறுதியாகவுள்ள இரு வரிகளும் கலைஞர்களின் மரணத்தை சுட்டிக்காட்டி மரணம் என்பது கடவுள் தந்த
வரம்,அது நீ விரும்பினாலும் நாடும்,விரும்பாவிட்டாலும் உன்னை நாடும் என்ற அறிவுரையை அகிலத்திற்கு சொல்ல நினைக்கிறேன் என் வரிகளில்...........,