பாடல்

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
காவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளம் மானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளம் மானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
காவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே

அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளம் மானே
யார் விழிகள் பட்டனவோ கன்னி இளம் மானே
சின்ன இடை பின்னலெல்லாம் கன்னி இளம் மானே
தென்றல் தந்த சீதனமோ கன்னி இளம் மானே
கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளம் மானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளம் மானே
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளம் மானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளம் மானே

பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளம் மானே
ஆ…ஆ….ஆ
பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளம் மானே
பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளம் மானே
பானுமதி மாறி வரும் வானகத்து மீனே
பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளம் மானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
காவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே

எழுதியவர் : (10-Apr-15, 12:06 am)
சேர்த்தது : Aashik Kavi
Tanglish : paadal
பார்வை : 32

மேலே