பெண்ணே உன் மொழி மௌனமா

அணு அளவும் சிந்திக்காமல்
உலகளவு காதலுடன் உன் கை பற்றினேன்
உள் நெஞ்சில் கள்ள எண்ணமில்லை
காதலன்றி காமமிதில் ஏதுமில்லை
கை பற்றியதால் காமமென்று நீ எண்ணினால்
தவறு உன் எண்ணத்தில், என்னில் இல்லை
என்னுடன் வா என்றுன்னை கேட்டேன்
பார்வை ஒன்றை வீசுகிறாய்
அதன் அர்த்தம் இன்னதென்று புரியவில்லை
கடவுளின் படைப்பில் நீ ஊமை இல்லை
இருந்தும் ஏனடி என்னிடம் பேசவில்லை
உலகில் ஆயிரம் மொழி இருப்பினும்
என் காதலை உன்னிடம் சொல்லும் நொடிகள் எல்லாம்
உன் செவ்விதழ் வார்த்தைகள் உதிர்ப்பதில்லை
பதில் சொல்லடி பெண்ணே
நீ அறிந்த மொழி மௌனம் மட்டும் தானா????

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (10-Apr-15, 1:25 am)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 102

மேலே