ஆளாவீர் நீங்களும் இந்நிலைக்கு
தள்ளாடும் முதுமைக்காலம்
தரணியில் இறுதிகாலம் !
இல்வாழ்வின் முடிவுரையே
இப்படத்தின் பொருளன்றோ !
எங்கோ பிறந்திட்டோம்
நாங்கோ இணைந்திட்டோம் !
நலமுடனே வாழ்ந்திட்டோம்
மக்களையும் பெற்றிட்டோம் !
அன்போடு அறிவூட்டினோம்
பாசமோடு பண்பூட்டினோம் !
முறையாக வளர்த்திட்டோம்
முறைகளை செய்திட்டோம் !
குறைநிறைகளை சுட்டினோம்
குறைவின்றி ஆளாக்கினோம் !
கடமைகளை முடித்திட்டோம்
கடனாளியென பெயரெடுத்தொம் !
பெற்றவைகள் கற்றவராயினர்
பெற்றவர்களை மறந்தவராயினர் !
பெற்றமக்கள் மாளிகையிலே
பெற்றேடுத்த நாங்கள்வீதியிலே !
முதியோரின் மனநிலையை
மதியுள்ளோர் அறிந்திடுவர் !
வாடியுள்ள இம்முகங்களே
வாசிக்குது எண்ணங்களை !
கைவிட்டனர் அன்னைதந்தையை
கைம்மாற்றாய் சுயநலமிக்கோர் !
உதறிவிட்டனர் உயிர்தந்தோரை
உயிர்இருந்தும் உள்ளமிலார் !
வந்தவழியை மறக்காதீர்
வாழும்வரை துறக்காதீர் !
பெற்றவர்களை போற்றுவீர்
பேரின்பத்தை பெற்றிடுவீர் !
வளர்த்த இதயங்களை இழக்காதீர்
வளர்ந்த உள்ளங்களை வேண்டுகிறேன் !
ஆளாக்கிய உயிர்களை உதறாதீர்
ஆளாவீர் நீங்களும் இந்நிலைக்கு !
பழனி குமார்
( படம் உதவி - முகநூல் )