வேர்களுக்கு வியர்க்கிறது

நம் முன்னதாய் இருக்கும்
ஊசிவடிவானதைப் போலத்தான்..
இடதுபுறம் கடந்திருந்த
சற்றுப் பரவலாயிருந்ததும் …

வலதுபுறம் நாம்
எதிர்நோக்கவிருப்பது ஊசியும்
பரவலும் கலந்து
கொஞ்சமேனும் வளைந்திருக்கலாம்…

நமக்கான அவசரங்களைவிட
வேகமாயிருக்கிறது… எதிர்காலம்…
எப்போது வேண்டுமானாலும்
உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!!

இலைப்பச்சையிலிருந்து இலை
உதிர்ந்துவிடும் முன்போ…
கணினி மென்பொருள்களுக்கு
நிறங்களைத்
தாரை வார்த்து விடுவதற்குள்ளாகவோ….

காலாரச் சென்று
பச்சையம் ரசித்துவிட்டு வருவோம் வா..

கடைசியாய் சாறு தெளித்துக்
களித்திருந்த தலைமுறை
என்னுடையதாகவும்…

பூசப்படா பச்சை
ரசித்திருந்த தலைமுறை
உன்னுடையதாகவும் இருக்கலாம்…!!

எழுதியவர் : நல்லை.சரவணா (10-Apr-15, 9:10 am)
பார்வை : 123

மேலே