என் உயிர் நீயடி

அன்பே
உன் கண்ணுக்குள் என்றும்
நானிருக்க வேண்டும்
என் கண்ணே நீதானடி பெண்ணே!

உன் பாதையில் பூ விரிக்கத் தவறினாலும்
முள் விரிக்க மாட்டேன் கண்ணே!

விடியலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் என்னை
வாழ்வென்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னை
வாழ்வினின்றும் தொலைத்துவிட மாட்டேன் கண்ணே!

உயிரென்று ஒன்றுண்டோ!
அதை உன் வடிவில் கண்டேன் பெண்ணே!

நான் உழைத்துச் சிந்தும் வியர்வைத்துளிகள்
நம் உலகம் செழிக்கத்தானடி
பெண்ணே!

காலத்தின் கைகள் நமக்காக நீட்டும் கலங்காதிரு கண்ணே!

காலன் வந்து கேட்டாலும் தரமாட்டேன் உன்னை!
தரும் நிலை வந்தால் அவனுக்கு
உன் உயிர்கொண்டால்
என் உயிர் இலவசம்.!!!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (10-Apr-15, 5:37 pm)
Tanglish : en uyir neeyadi
பார்வை : 464

மேலே