பனை மரமும் பயன்களும்
பனை மரமும் பயன்களும் ஏதோ ஆரம்பப் பள்ளி பாடத் தலைபு போல்
இருக்கிறது. உண்மைதான்.பள்ளி நாட்களில் படித்த ஒரு கவிதை
"ஒற்றைப் பனை மரமே உதவி இல்லா நெடுமரமே" அப்படியா ?
நிற்க நிழல் தருவதில்லை உண்மை. அது தின்பதற்கு சுவையான
நுங்கு தருகிற்து. அதன் பதநி அருந்துவதற்கு இனியது.பனை மரம்
குடிசை அமைப்பதற்கும் அதன் ஓலை கூரை வேய்வதற்கும் பயன்
படுகிற்து பன்னெடுங் காலமாக புலவர்கள் இலக்கியம் எழுத ஏடாகப்
பயன்பட்டது இந்த பனையோலை தானே ? பயன் தரும் அந்தப் பனை
மரம் போற்றும் சில பனைப் பாக்கள்.
பனைநுங் குபத நியருந்த ஓலைதான்
யாத்திட நற்கவிதை ஏடு
பனைதராது நீழல் பதநி இனிமை
புனைகவி கையிலோ லை
குடிசைக்கு ஓலைகை தந்து தவும்பனை
ஏழையின் நல்லநண் பன்
கவின் சாரலன்