அம்மம்மா என் அம்மா

அம்மம்மா என் அம்மா !!

உன் கண்களின்
ஆனந்த கண்ணீர் கூட
என் நெஞ்சம் தாங்கதம்மா !

பனித்துளிகளை உருக்க
பாசத்துடன்
ஓடோடி வந்தேன்
பார்வையை என் மீது வீசம்மா !

பூவிதழ் கரங்களால்
ஒத்துகின்றேன் உன்
புன் சிரிப்பை என் மீது
வீசம்மா !

கண்களை
கண்ணீரால் திரை போட்டு
என் இதயத்தை மூடி விடாதேம்மா !

என் உலகம்
நீ தான் அம்மா !

உன் வலிகளுக்கு
நிவாரணமாய்
நான் உள்ளேன் அம்மா !

அழாதே அம்மா
அழாதே !
===============கிருபா கணேஷ் =========================

எழுதியவர் : kirupaganesh (11-Apr-15, 9:43 pm)
Tanglish : ammamma en amma
பார்வை : 1177

மேலே