நேரம் இல்லாமல்

அதிகாலை எழுந்தது முதல்
வீட்டின் அத்தனை வேலைகளையும் முடித்து
அலுவலகப் பணியிலும் சோடை போகாமல்
ஆன்மீகத்தையும் கவனித்து..
ஆக மொத்தத்தில்
சரியான நிறைவான நாளை முடித்து

பால் பொழியும் பௌர்ணமி இரவு நேரத்தில்
கற்கண்டு மணத்துடன்
கொதிக்கும் பாலுடன்
மல்லிகையின் மணம்
வீட்டை நிறைக்க..

உன் மனம் நான் நிறைப்பேன் என்றெண்ணி
உன் அருகிலேயே நான் நின்றால்
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்
கணினி இயக்கவும்...
பாடல் கேட்கவும் நேரம் சரியாக
பாவம் திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாமல்...

எழுதியவர் : சாந்தி ராஜி (11-Apr-15, 10:52 pm)
Tanglish : neram illamal
பார்வை : 77

மேலே