தமிழ் வருஷம்

தமிழ் "வருஷம்"!
====================================செங்கீரன்

அறுபது வருஷங்களின்
பட்டியல் முழுவதும் தேடியும்
தெரிய வில்லை
தமிழ்ப்புத்தாண்டு!

கோவில்களில்
அர்ச்சர்களுடன்
மொழி புரியாமல்
தமிழன் என்ற
ஒரு "கோத்திரம்" சொல்லி
நிற்கின்றோம்.
அங்கும் தெரியவில்லை
தமிழ்ப்புத்தாண்டு.

எதோ ஒரு பெயர்
சினிமாவின்
ஒரு "ஜிகினா ஸ்ரீ"யும் கூட
நாளை
தமிழ் "வருஷத்தில்"
வந்தாலும் வருவாள்.

அப்போதும்
அர்ச்சனைத்தட்டு ஏந்தி
ஆனந்தமாய் கியூவில் நிற்போம்
ஓ! தமிழர்களே!

==============================================!

எழுதியவர் : செங்கீரன் (12-Apr-15, 4:53 pm)
Tanglish : thamizh varusam
பார்வை : 101

மேலே