தந்தபாடில்லை

தினமும் வந்து
அந்த வரிசையில்
அடுத்தடுத்து அவர்கள்
கால்வலிக்க நின்றே
நண்பர்கள் ஆனார்கள்...

முத்தையா தேவர்
பெயரனும்
நல்லமுத்து நாடார்
மகனும்..

இன்னும் அங்கே
தந்தபாடில்லை
சாதிச்சான்றிதழ்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Apr-15, 7:20 pm)
பார்வை : 56

மேலே