கவிஞன் உருவாகிறான்

ஓராயிரம் வலிகள் சுமந்து
ஒருநூறு கவிதைகள் எழுதினேன்!

வேலையில்லா பட்டதாரியின்
விண்ணப்பங்களைப் போல்
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது
எனது கவிதைகளும்!

பலப்பல இதழ்கள் - திங்கள்தோறும்
பகட்டாய் வருகிறது!
பணமுள்ள கவிஞர்களை- அது
தூக்கிப் பிடிக்கிறது!
சில இதழ்கள் - மட்டும்
விதி விலக்காகிறது!

நான்
விண்ணப்பிப்பதை நிறுத்தவில்லை!
என் கவிதைகளை
விற்பதற்கும் தயாரில்லை!

தமிழ்
என் உயிர்...
தமிழினம்
என் உறவுகள்...

பகட்டான பக்கங்களில் - என்
புகழ்பாடும் ஓர்நாள்!
நானும்
கவிஞனாகியிருப்பேன் அந்நாளில்!

-சுகன்யா ஞானசூரி

எழுதியவர் : சுகன்யா ஞானசூரி (14-Apr-15, 10:50 pm)
சேர்த்தது : மா.உ.ஞானசூரி
பார்வை : 67

மேலே