எதற்கு தலைப்பு

ஆயிரந் திருமுறைகளும் வெற்றிப் பாதை கொண்டு
என் வாழ்வின் ஒரு பக்கமாய் மாற விழைந்தது!

பதிற்றாந்த் தாரையின் பார்வை கொஞ்சம்
கொளுந்திலையின் குணம் கொண்டு-கொடுமை காணா
காதல் முளைந்த்தேரிந்து வீரியம் குறையா - குணக் குவியல்
கொண்டு மரணம் காணா குணாதிசியம் கொண்ட மருந்து !

பதுமை காணா காவியம் ஒன்று மொழியிழந்து
வார்த்தைக் கோர்வை மலர - அன்பு- டன் பார்வை
பாதையைக் குவியம் கொண்டு பாதையில் மாறா குரலிசையில்
கடைந்தெடுத்த உயிர்ச் சாதம்
உண்மையின் குரல் கீதத்தில் என் செவிக்கு !

மங்கைத் தெளிவு பூண்டு மாற்றாந் தரையில் மொட்டு வைத்து
தன மனத் தரையில் பூ பூத்து மற்றொரு மாற்றாந் தரையில்
காவியம் படைக்கும் அற்புத ஜீவன் !

என்னின் கனவு எனக்குள் எழுந்து மரு காவியம் ஒன்று
மறு காவியமாய் வடித்தெழுக்க பேனா மை கூட
ஆசை கொண்டு என்னின் மருவாய் வலியுறுத்து
ஆசையாய் மனதில் ஊன்றுகிறது !

நினைத்துருகிய மொழிகளும் இலக்கணங்களும்
கூட கவிதை நயம் போங்க தமிழுக்கு கதியான
நூல்களைப் போல் அழுத்தம் பதிய கருத்துறை
வழங்க பதியம் கண்ட கவிதை சிகப்புக் கம்பளமடா
அந்தக் மைச்சரல்கள் !

எழுதியவர் : வேல்முருகானந்தன். சி (15-Apr-15, 2:48 pm)
Tanglish : etharkku thalaippu
பார்வை : 179

மேலே