கோடை சூரியன்

கோடை சூரியன்!!

ஒளிரக் கண்டேன் நீண்ட - இரவின்
குளிர்ச்சி குறைந் ததுவே!
ஒளிக் கதிரைப் பாய்ச்சி - கதிரவன்
உயரக் கிளம்பிணன் பாரீர்!

கூடக் கண்டேன் வெப்பம் - வெயில்
குடுகுடு எனுயர்ந் ததுவே!
விளைவாசி உயர்வைப் போல் - வெப்பம்
வெளியெங் கினும் காணீர்!

எருதுடன் உழுதிடும் மக்காள் - மெல்ல
உழுதுக் களைத்தனர் சோர்வால்!
மேய்ந்திட் டபசுக் களெல்லாம் - நிழலில்
மெதுவாய் அசைப்போட் டனவே!

வாழைஇலை தொன்னை யாக்கி - கஞ்சி
வாங்கிக் குடித்தனர் பசியால்!
பெரண்டைத் துவைய ளோடே - மணக்கும்
வரகும் சாமையு மொன்றாய்!

பார்த்திபன்.ப
15/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (15-Apr-15, 4:31 pm)
பார்வை : 81

மேலே