தென்னை
மரங்களில் அழகியது தென்னை. பூமலர் மரங்களில் பூக்கள் அழாகாய்
இருக்கும். தென்னை பூப்பது காய்ப்பதற்கு.நாணத்தில் நிற்கும்
பெண்ணுக்கு உவமையாய் தென்னையைத்தான் சொல்ல முடியும்
தென்னையைப் பற்றி சொன்னாலே அதுவே கவிதைத் தோப்பகிவிடும்
தென்னங்கீற் றின்தென்றல் தன்னிலாட செவ்விளநீர்
தென்னையோ நாணுகின் றாள்
வாய்க்கால் கரையில் வரிசையில் நின்றே
நிழல்தந் திடும்நற்தென் னை
குளிர்ந்தநீர் வாய்க்காலில் தென்றலாட மேலைக்
கதிரொளியில் கீற்றாடு தே
காற்றெனும் காதலன் கட்டித் தழுவிட
நாணத்தில் கோதைதென் னை
மேலைக் கதிர்கீற்று திற்ந்தெட்டிப் பார்க்கவே
சோலை மலர்சிரிக் கும்
கவின் சாரலன்
கவிக் குறிப்பு : இவை குறள் வெண்பாக்கள் அறிவீர்கள் .
யாப்பு பயிலுங்கள் முயலுங்கள் உங்களக்கு அது பெருமிதம் தரும்