தாலியை கழட்டி எறிந்தவர்கள் பெண்களே அல்ல - பாஜக
தாலியை கழட்டி எறிந்தவர்கள் பெண்களே அல்ல - பாஜக..!
அப்புடீனா தாலியே அணியாத.... முஸ்லிம் / கிருத்துவர் / மார்வாடி குரூப்பில் ஒரு பிரிவினர்...ஏனைய பழங்குடி மக்களின் பெண்கள் எல்லாம் யாருண்ணே....?
( நீங்க வாட்டுக்கு சொல்லிட்டு போயிருவீங்க....காவிகளும் அண்ணே சொல்லிட்டாரு கரெக்கிட்டா இருக்கும் - னு கூவுவாங்கே.... ). பிறகு எதுக்கு நாங்க இங்க சுத்திகிட்டு
இருக்கோம்...)
தாலியை அகற்றிக்கொண்ட பெண்களை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து வந்தவர்கள்’ என்று கொச்சைப்படுத்தும் வகையில்,
தமது ஆணாதிக்கப்போக்கை வெளிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னணி பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவருடைய அநாகரிகமான இந்த போக்கையும், மதவாத சக்திகளோடு கைக்கோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் போக்கையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்றா தொல். திருமா அவர்கள்....!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும் கண்டித்துள்ளார் இவ்வாறு..
ஒருவர் தாலி அணிவதும், அகற்றிக் கொள்வதும் அவரவர் தனிமனித விருப்பமும், உரிமையும் ஆகும்.
பெரியார் திடல் வளாகத்துக்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய தாலி அகற்றும் நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
நிகழ்ச்சி முடிந்து வெளியூர் செல்ல முயன்ற 10– க்கும் மேற்பட்ட திராவிட கழக தொண்டர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்த மண்ணில் வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள் வேரூன்றி தலைதூக்க முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
எனவே தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள், ஓரணியில் திரள வேண்டும்.
- சங்கிலிக்கருப்பு -