அன்பே அன்பு செய்வோம்

...""அன்பே.. அன்பு செய்வோம் ""...

சொல்லாத வார்த்தைகளும்
எனக்காய் சொந்தமாகிறது
அன்பானவர்களின் பாசமும்
என்னோடு சண்டையிடுகிறது
ஆசையும் அன்பும் இடம்மாறி
ஆசைகள் முந்திக்கொள்வதால்
அன்பானது அவதிப்படுகிறது !!!

இல்லாத ஒன்றை இருப்பதாய்
நினைத்து இருப்பதை இல்லாது
இருட்டில் தொலைத்த ஒன்றை
வெளிச்சம் இருக்கும் இடத்தில்
தேடுவது எப்படி சாத்தியமாகும்
எங்கு தொலைந்ததோ அங்கு
தேடினால் கிடைக்கும் அன்பு !!!

பணத்தையும் புகழையும் தேடி
சிறகுகள் இல்லாமலே பறந்து
அங்கும் இங்குமாய் அலைந்து
உண்மையின் அன்பைவிட்டும்
வெகுதூரமாகவே பயணிக்க
ஏங்கியே தவிக்கிற உள்ளமது
என்றும் காணாமலே போகிறது !!!

மெல்லிதழ்கள் ஒன்றிணைய
எச்சிலின் தேனது இடம்மாற
எடுத்துக்கொண்டு கொடுப்பதும்
கொடுத்துவிட்டு எடுப்பதுபோல்
பரஸ்ப்பரமாய் அன்புசெய்தே
இழந்ததையெல்லாம் மீட்டுவிடு
இன்பமாய் இனி நீ வாழ்ந்துவிடு !!!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (16-Apr-15, 1:24 pm)
Tanglish : annpae anbu seivom
பார்வை : 293

மேலே