பட்டங்கள்

(ஒரு மராத்தியக் கவிதையின் உந்துதலில் எழுதிய படைப்பு)
======================================================

அன்று-
பலவண்ணப்
பட்டங்களை
வித விதமான
வடிவங்களில்
ஆடிக் காற்றில் பறக்கவிட்டு
ஆனந்தமாய் விளையாடிய ஞாபகம்!

பட்டங்கள்-
பறந்து மகிழ்வித்தைவிட
நம்மை ஓட வைத்து பார்த்தன !

முட்கள் தைத்த பாதங்களோ
முட்டி சிராய்ப்புக் காயங்களோ
உள்ளங்கை கீறிய வலிகளோ
எள்ளளவும் அறியாமல்
சந்தோஷமும் தொலைக்காமல்
நாம் வாழக் கற்றுக் கொடுத்தன !

இன்றும்-
பட்டங்கள்
பறக்கவிடப் பட்டால்
சந்தையில் கிடைக்காத
சந்தோஷங்களை நமது
சந்ததிக்கும் அளிக்கக் கூடும் !

ஆனால்-
பட்டங்கள் விடும்
சுட்டிகளும் குறைவு !
பட்டம் விட மைதானங்களும் !

எழுதியவர் : ஜி ராஜன் (16-Apr-15, 4:19 pm)
Tanglish : pattangal
பார்வை : 93

மேலே