வெளிநாட்டு வாழ்கை
நீ வெளி நாட்டில் அங்கே சம்பாதிக்கும் பணம்
உன் பிள்ளைக்கு இங்கே
கண்காட்சி பொருளாக மட்டுமே....
கை நிறைய பணம் இருந்தாலும்
பிள்ளை கேட்கும் குருவி ரொட்டியை
வாங்கித்தரமுடியவில்லை
செல்லா காசாய் வெளி நாட்டுபணம் இங்கே.....
வெகு நாட்கள் வாழ்கயில் பயணித்து
கடந்த பிறகுதான் அப்பாவுக்கு புரிகிறது......
இளமையை விற்று பாசத்தை
அணையிட்டு தடுத்து
அனைத்து சொந்தங்களும் எனக்காக காத்திருக்க
தனிமையில் அன்பிற்காக தவம் கிடந்த தவிப்பும்....
பெற்றபிள்ளையின்
சின்ன சின்ன குறும்புகளையும்
மார்மீது எட்டி உதைத்து
பிஞ்சு கரத்தால் மீசையை பற்றி இழுக்கும்
செல்ல குறும்பும்......
இப்படி சொல்ல முடிந்தவைகளும்
சொல்ல முடியா அன்பிற்க்குரியவளின் தவிப்பும்
எத்தனை இழந்திருக்கிறோம்.....
உணர்வுகளை புரிந்துகொள்ளமுடியா இந்த பணத்திற்காக என்று......
ரேவதி.......