தனிமை ஞானி

கனவை சுமந்து
இரவில் நடந்து
நனவை சுமந்து
நாளில் நடந்து
நினைவை சுமந்து
கவிதையில் நடந்து
உறவை சுமந்து
உயிரில் வளர்த்து
பிரிவை சுமந்து
தனிமையில் நடக்கிறேன்
வாழ்வில்

கனவின் பொய்களை
நனவின் நிதரிசனங்களை
கவிதையின் வெறுமைகளை
நித்தம் போதிக்கிறது
தனிமை எனும் ஞானி

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-15, 4:52 pm)
Tanglish : thanimai njaani
பார்வை : 519

மேலே