அன்பின் இலக்கண பிழை
மண்ணில் பிறந்த மனிதனுக்குத் தான்
மனதாய் வாழும் கர்வம்
மண்ணாய் மடியும் முடிவு!
காசின் பலத்தால் காலந்தள்ளும்
வேஷம் களையும் நிகழ்வு தான்
அன்பில் காணும் உயர்வு!
அன்பின் இலக்கண பிழை தான்
ஆசை எனும் அவல நிலை!
அறிவின் செருக்கால் அகந்தை கொண்டு
அறவழி மறக்கும் ஆணவ நிலை
அதுவே மனதின் மரண எல்லை!