நிலையில்லா நிலைகள்

விழுந்து விடும்
நிலையில் ஒரு
வித்தாய் பாறைக்குள் ஒளிந்தேன்!

இடர்கள் என்னை
இடம் கொடாது
துரத்தும் போதும்
இடையறாத போரில்
இலேசாக முளைவிட்டேன்!

ஒழிந்தே போவேன் என
ஒவ்வொரு முறையும்
ஓராயிரம் தொல்லைகளைத் தாண்டி
வேர் பிடித்தேன்!

ஆண்களும் பெண்களும்
ஆயிரம் ஆயிரமாய் கடந்த பின்னும்
ஆனந்த தென்றலை
அள்ளி வழங்கிக் கொண்டு
அந்தோ பரிதாபம் என்று
வீழுமோ என்பவரிடையில்
என்னை பாறை தாங்குகிறதா
பாறையை நான் தாங்குகிறேனா
புரியாத போரில்
வெற்றி என்னமோ எனக்குத்தான்!

வேரொன்று ஆணி வேரொன்று கொண்டேன்!
அழிந்துப் போவதில்லை !
எங்கிருந்தோ துளிர்விடுவேன் - ஆனால்
பாறையோ யாரடித்தாலும் மண்
துகளாய் மடிந்துவிடும். - எனவே
நிலைகள் எல்லாம் நிலையில்லை!
பெருமைகள் எல்லாம் பெருமைகளில்லை!
சிறுமைகள் எல்லாம் சிறுமைகளில்லை - உன்
பலவீனம் கூட பலமாய் மாறிடும்!
பலம் கூடிட நிலை உயரும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Apr-15, 1:50 pm)
பார்வை : 102

மேலே