நான் கவிதை எழுதுகிறேனா

விளக்கொளியில் விழுந்து
வாழத்துடிக்கும்
விட்டில் பூச்சியின் வலியிலும்
அதற்கு வாழ்வு கொடுக்கத்
தெரியாமல்.....
கவிதையெழுதத் தெரிகிறது
எனக்கு......
எங்கோ நடக்கும்
உயிர்பலிகளைக் கூட
என் எழுத்திற்கு சாதகமாக்கி
அழகிய சொல்லாடல்கள் கொண்டு
கவிதை முலாம் பூசி
கைத்தட்டல்கள் வாங்கத்
தெரிகிறது எனக்கு......
மற்றோர் மனதினையும்
நயமொழுகப் பேசி
நாணயமில்லா சொற்களைக்
கையாண்டு கண்ணியத்தை
காற்றில் பறக்கவிட்டு
வலிமிகு வாழ்வையும்
வக்கிரமாய் வாங்கி
வார்த்தை வடிவம் கொடுக்கத்
தெரிகிறது எனக்கு........
எனது பெயர் கவிஞன் (கவிதாயினி)
யாதும் ஊரே யாவரும் கேளீர்
வலிக்கு உதவாத விரல்கள்
எழுத்துக்கு உருவம்
கொடுக்கின்றன
விழிநீரை துடைக்காத
மொழிகள் கவிதைகளாகின்றன
வலிக்கும் விழிக்கும்
மொழிக்கும் என்று
வித்தியாசம் தெரியப்
போகிறது எனக்கு.......................??????
................சஹானா தாஸ்