வரமா சாபமா
அன்பால் தாய்மை வெல்லும் காதலியும்
பண்பால் நட்பை வெல்லும் காதலனும்
தாய்மைநட்பு இரண்டையும் வெல்லும் காதலும்
உலகில்.. வரமா ? சாபமா ?
வரமென்றால்...
தாய்மை நட்பிரண்டும் தோற்கும்
சாபமென்றாலோ..
தோற்பது காதலோன்றே யென்பதால்..
சாபமென்றே முடிக்கின்றேன் நான்
(விரும்பினால் உங்கள் கருத்தையும் கவிதையாய் தொடரலாம் நட்'பூ'க்களே)