வாழும் வரை

வாழும் வரை
வாழ்வது
அல்ல
வாழ்க்கை.....வாழ்ந்து
போன
பின்பும்
நல் உள்ளங்களில்
நம் நாமம்
நிலைக்க
வாழ்வதே.....சிறப்பு.....!
கனவென்பது
பொய்.....கணப்பொழுதே
மெய்.....தீண்டும்
தென்றல்
கோபம் கொண்டால்
சேதம் இங்கே
மீதமடா.....!
கேளிக்கைகள்
எல்லாம்
வாடிக்கையாய்
போச்சு....கேவலம்
இங்கே
கேள்வியோடு
நிற்குது......!
நாளைய
தேவைக்காய்
இன்றைய
ஓட்டம்
நாளைய
உன்னோடும்
முடிந்திடா
சோகம் இது....!
உணர்வு
மறந்து
உலவும்
மனிதா.....சொல்
உண்மையில்
நீயும்
உயர்ந்தவன்
தானா?
உலகம்
உருண்டை
சொன்னவன்
கோமாளி.....அதையே
படிச்சவன்
சொன்னால்
அறிவாளி.....இங்கே
நாம்
தானே
ஏமாளி.....!?
சாதி எல்லாம்
வேண்டாம்
அது
சாக்கடை......தாராளமாய்
அங்கே
எல்லாம் பூக்
கடை......!
மதுபானக்
கடை
எல்லாம்
மொய்க்கும்
மனிதக்
கூட்டம்....மறந்தே
போச்சுது
குடியை
குடியால்......!
தாடி
வைச்சா
சோகம்....குடுமி
வைச்சா
சாமி.....எங்கேயடா
போகுது
இந்த
பூமி....?
கேடுகெட்ட
உலகத்தில
நாடு கேட்டு
நாடு
போடுது
சமர்......வாழப்போற
உன்னையும்
என்னையும்
கொன்றுவிட்டு......!